ரோட்டில் பேய்கள் என்ற பெயரில் நள்ளிரவில் வீலிங் 14 பேர் கைது

பெங்களுர் : நவம்பர். 17 – வீதியில் பேய்கள் என்ற பெயரில் கூட்டம் சேர்த்துக்கொண்டு நள்ளிரவில் அபாயகரமாக மோட்டார் சைக்கிள் சாதனைகள் செய்து வந்த 14 பேரை மேற்கு பகுதி போக்குவரத்து போலீசார் கைது செய்துள்ளனர் . கைது செய்யப்பட்டவர்களின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கூடுதல் விசாரணை நடந்து வருவதாக டி சி பி அனிதா ஹத்தன்னவார் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் வீதியில் பேய்கள் என்ற பெயரில் சங்கம் அமைத்து கொண்டு உரத்த சத்தம் வரும் சைலன்சர்களை பயன்படுத்திக்கொண்டு வார இறுதி நாட்களில் இரவு 11 மணிமுதல் அதிகாலை இரண்டு மணி வரையில் வீலிங்க் செய்து வந்துள்ளநர். வீலிங்க் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க என்றே அமைக்க பட்டுள்ள தனிப்படை காமாட்சிபாள்யா போலீசார் ஆரம்பத்தில் ஒருவனை கைது செய்து அவனை விசாரித்தபோது கிடைத்த தகவல்களின் பேரில் மேலும் 13 பேரை கைது செய்துள்ளனர். புறப்பகுதி வட்ட சாலையில் மற்றும் நாகரபாவி சர்விஸ் வீதிகளில் இவர்கள் இருசக்கர வாகன சாகசங்களை செய்து வந்துள்ளார். இது குறித்து பொது மக்கள் அளித்த புகார்களின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தவிர இவர்கள் தங்கள் சாகசங்களை வீடியோ படம் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் உள்ளனர். இப்படி சமுக வலைதளத்தில் தன்னுடைய சாகசத்தை பதிவு செய்த ஒருவனை போலீசார் முதலில் கைது செய்துள்ளனர். பின்னர் அவனை விசாரித்த பின்னர் 18 வயதுக்கு குறைவான 13 பேர் சமூக வலைதளங்களில் தங்கள் சாகசங்களை பதிவு செய்திருப்பது தெரிய வந்து இவர்களை கைது செய்துள்ளனர்.