ரோஹித்தின் ராஜதந்திரம் இங்கிலாந்தை துவம்சம் செய்ய காரணமான 5 விஷயங்கள்

சென்னை: அக். 30-நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 2023 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து நாக் அவுட் ஆவது உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தை துவம்சம் செய்ய காரணமாக 5 விஷயங்கள் இருந்தன. இந்த போட்டியில் தொடக்கத்திலேயே இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கில் 13 பந்துகள் பிடித்து வெறும் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கோலி இன்னொரு பக்கம் டக் அவுட் ஆனார். பிட்ச் அந்த அளவிற்கு பேட்டிங் செய்ய கஷ்டமாக இருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
எதிர்பார்த்தபடியே ஷார்ட் பந்தில் அவர் அவுட் ஆனார். இதன் பின் அணியை சரிவில் இருந்து மீட்டு ரோஹித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார். 101 பந்துகள் பிடித்த 87 ரன்கள் எடுத்தார்.
இதில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ராகுல் 39 ரன்கள் எடுத்தார் . கடைசி கட்டத்தில் விளாசிய சூரியகுமார் யாதவ் 47 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். இதனால் 180ல் சுருண்டிருக்க வேண்டிய இந்திய அணி 229-9 ரன்கள் எடுத்தது. பவுலிங்:
இதையடுத்து பவுலிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்கள் மீது பிரஷர் போட்டது. டேவிட் மாலன் விக்கெட்டை 16 ரன்களுக்கு பும்ரா எடுத்தார். அடுத்த பந்தே ஜோ ரூட் விக்கெட்டை பும்ரா எடுத்தார். பின்னர் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஷமி டக் அவுட்டில் எடுக்க இங்கிலாந்து அணி திணறியது., அடுத்து பிரைஸ்டா விக்கெட்டை 14 ரன்களுக்கு சமி எடுத்தார்.