லஞ்சம்: காங்கிரஸ் பிஜேபி மோதல்

பெங்களூரு, ஜன.25-
கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முறைகேடு லஞ்சப் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கை முடித்து வைக்க போலீஸ் உயர் அதிகாரி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு காங்கிரஸ் போர்க்கொடி தூக்கி உள்ளது இதனால் கர்நாடக மாநில காங்கிரஸ் பிஜேபி இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு வழக்கை முடித்து வைக்க போலீஸ் டிஎஸ்பி சங்கர் கவுடா மூணு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக முக்கிய குற்றவாளி பாட்டில் பரபரப்பு வீடியோ வெளியிட்டு விட்டு போலீசில் சரணடைந்தார . இதற்கான ஆதாரம் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். லஞ்ச முறை கேட்டு வழக்கை முடித்துக் கொள்ள லஞ்சம் கேட்ட விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி தீவிரமாக எடுத்துக் கொண்டு உள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கு தமது ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் திட்டம் வகுத்து உள்ளது முக்கிய குற்றவாளி பாட்டில் வெளியிட்ட வீடியோவை மக்கள் மத்தியில் கொண்டு சென்று நீதி கேட்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது இதன் ஒரு பகுதியாக இப்போது உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளது இதற்கு பிஜேபி தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது பிஎஸ்ஐ ஆட்சேர்ப்பு சட்டவிரோத வழக்கில் இருந்து தப்பிக்க சிஐடி டிவைஎஸ்பி சங்கர் கவுடா பாட்டீலுக்கு முதல் கட்டமாக 76 லட்சம். லஞ்சம் கொடுத்ததாக முக்கிய குற்றவாளியான ஆர்.டி. பாட்டீலின் அறிக்கை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், முதல்வர் பசவராஜா பொம்மையும், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் பிஎஸ்ஐயின் சட்டவிரோதத்தை மறைக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இந்த சட்டவிரோத செயலில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பாஜக தலைவர்களின் மகன்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக பாஜக எம்எல்ஏ பசன் கவுடா பாட்டீல் யத்னால் குற்றம்சாட்டியுள்ளார். விதான சவுதாவை பாஜக பயன்படுத்தி பணம் பெறுவதாக அவர் புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது