லஞ்சம் – முதல்வர் வீடு முற்றுகை

பெங்களூர் மார்ச் 4-
கர்நாடக மாநில பிஜேபி எம்எல்ஏ மகன் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிப்பட்ட விவகாரமும் அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 8 கோடி ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரமும் கர்நாடக மாநில அரசியலை உலுக்கி உள்ளது. ஆளும் பிஜேபிக்கு இது பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதை தங்களின் தேர்தல் ஆயுதமாக காங்கிரசார் கையில் எடுத்து உள்ளனர். கர்நாடக மாநில பிஜேபி அரசு 40% கமிஷன் அரசு என்பது உறுதியாகிவிட்டது முதல்வர் பகவராஜ் பொம்மை பதவியில் நீடிக்கும் அருகதையை இழந்துவிட்டார் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பெங்களூரில் இன்று போராட்டம் நடத்தினர் முதல்வர் பசவராஜ் பொம்மை வீட்டை முற்றுகை இட முயற்சி செய்தனர் இதை எடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பி ஜே பி எம் எல் ஏ விரூபாக்ஷப்பா மகனின் லஞ்ச விவகாரம் மாநில அரசியலில் பூவதாகரமாய் வெடித்திருக்கும் நிலையில் மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரத்தை முன்வைத்து போராட்டங்கள் நடத்தி முதல்வரின் ராஜீனாமாவிற்கு வற்புறுத்திவருகிறது . இதற்கு பி ஜே பியும் சற்றும் சளைக்காமல் முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளது. இவைஅனைத்திற்கும் இடையில் கே எஸ் டி எல் வாரிய தலைவர் பதவிக்கு ராஜினாமா அளித்துள்ள எம் எல் ஏ மாடால் விரூபாக்ஷப்பா தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ள உடனேயே தலைமறைவாகியிருப்பதுடன் இவரை தேடி கண்டு பிடிப்பதில் லோகாயுக்தா போலீசார் தீவிரமாயுள்ளனர். இந்த லஞ்ச விவகாரத்தில் எம் எல் ஏ முதல் குற்றவாளியாயிருக்கும் நிலையில் அவரை தேடி பிடித்து அவரிடம் விசாரணை நடத்த லோகாயுக்தா போலீசார் தீவிராமியிருக்கும் நிலையில் இந்த லஞ்ச விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி முதல்வரின் ராஜினாமை வற்புறுத்தி இன்று முதல்வரின் ரேஸ் கோர்ஸ் வீதியின் வீட்டின் எதிரில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளது. முதல்வரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர்களை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ரணதீப் சிங்க் சுர்ஜீவாளா , மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் , மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா , முன்னாள் அமைச்சர்கள் கே ஜெ ஜார்ஜ் , ராமலிங்க ரெட்டி , தினேஷ் குண்டுராவ் , சலீம் அஹமத் , முன்னாள் துணை மேயர் பி எஸ் புட்டராஜு , மற்றும் பிரமுகர்கள் உதயசங்கர் உட்பட பல்வேறு பிரமுகர்களும் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கு கொண்டனர். போராட்டத்தில் ஈடு பட்ட காங்கிரசார் தெரிவிக்கையில் எம் எல் ஏ மாடல் விரூபாக்ஷப்பாவின் மகன் ஆதாரங்களுடன் லோகாயுக்தா போலீசார் வலையில் சிக்கியுள்ளார். இதனால் பி ஜே பி ஆட்சியின் 40 சதவிகித கமிஷன் புகார் நிரூபணமாகியள்ளது . இந்த ஊழலுக்கு முழு பொறுப்பேற்று முதல்வர் உடனே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என காங்கிரஸ் பிரமுகர்கள் வறுபுறுத்தினர். இதே வேளையில் தற்போது தலைமறைவாயுள்ள பி ஜெ பி எம் எல் ஏ மாடால் விரூபாக்ஷப்பாவை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.