லஞ்ச புகாரில் ஏடிஜிபி அலோக் குமார் மீதான வழக்கு ரத்து

பெங்களூர் : செப்டம்பர். 14 – ளஞ்ச புகாரில் ரௌடி மல்லிகார்ஜுனா என்ற ரவி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக உயர் போலீஸ் ஐ பி எஸ் அதிகாரி அலோக் குமாருக்கு எதிரான குற்றவியல் வழக்கை மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . கடந்த 2015ல் லோகாயுக்தா போலீசார் பதிவு செய்திருந்த குற்றம் தொடர்பாக தனக்கு எதிரான விசாரணைகள் குறித்து 2022ல் சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து அலோக் குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாகப்ரஸன்னா மனுதாரருக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ள வழி இல்லாத நிலையில் சிறப்பு நீதிமன்றம் தானாக இந்த வழக்கை ஏற்க முடியாது. என தெரிவித்திருப்பதுடன் இந்த குற்றத்தை பதிவு செய்யும்போது மனுதாரரை குற்றவாளி என குறிப்பிடவில்லை. பின்னர் லோகாயுக்தா போலீசார் விசாரணை நடத்தி சிறப்பு நீதிமன்றத்திற்கு பி அறிக்கை (சாட்சிகள் இல்லை ) தாக்கல் செய்துள்ளனர்.
இந்த பி அறிக்கையை தள்ளுபடி செய்யவேண்டும் என புகார்தாரர் தாக்கல் செய்துள்ள மேமோவின் ஆதாரத்தை வைத்து மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அலோக் குமார் ஆதரவு வழக்கறிஞ்சர் வாதாடுகையில் மனுதாரர் நகரில் ரௌடி நடவடிக்கைகளை மிகவும் கண்டிப்புடன் தடுத்து வந்துள்ளார். 2015 மே மாதம் 30 அன்று பார் மற்றும் ரெஸ்டாரெண்ட் ஒன்றின் நிர்வாக குழுவினர் மற்றும் புகார்தாரர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்து வயாளிகாவல் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் பதிவாகியிருந்தது விசாரணையின் போது ரவிக்கு போலீஸ் உயரதிகாரிகள் போன் செய்து இந்த விவகாரத்தை மூடி மறைக்க லஞ்சம் கேட்டுள்ளதாதக தெரியவந்துள்ளது. இதில் ரவி 5 லட்சம் கொடுத்திருந்த நிலையில் ஏ சி பி ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளார். இந்த பணத்தை அலோக் குமாருக்கு கொடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது . தவிர அப்படி லஞ்சம் கொடுக்கவில்லை எனில் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதாக மிரட்டல் விதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட லோகாயுக்தா போலீசார் அலோக் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சான்றும் இல்லை என பி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.