லவங்கம் போட்ட சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


ஆரோக்யத்தை காப்பாற்றிக்கொள்வது முக்கியமானது. ஆரோக்கியத்தை ஒரே நாளில் நாம் பெற்று விட முடியாது. தினமும் ஒவ்வொரு நிமிடமும் நாம் செய்யும் பல சிறிய விஷயங்களும் நாம் ஆரோக்கியமாய் இருக்க உதவுகின்றன. உதாரணத்திற்கு தினமும் ஒன்று முதல் இரண்டு லிட்டர் நீர் குடிப்பதால் உடல் ஆரோக்யமாக இருக்கும். அதே நேரத்தில் அலோவேரா அல்லது நெல்லிக்காய் ஜூஸை காலையில் குடித்து வந்தால் பல வ்யாதிகளிலிருந்து நாம் விலகி இருக்கலாம். இதே வகையில் லவங்கமும் சேரும். உறங்கும் முன்னர் லவங்கத்தை சுடுநீருடன் கலந்து குடித்தால் நாம் ஆரோக்கியமாய் இருக்கலாம். லவங்கத்தில் வைட்டமின் இ, வைட்டமின் சி போலேட், ரிபோப்லாவின், வைட்டமின் எ, தயாமின், வைட்டமின் டி ஒமேகா ஆகியவை இருப்பதால் இவை உடல் எரிச்சல் மற்றும் பேக்டீரியாக்களுக்கெதிராக போராடும் ஆற்றல் உள்ளன. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். அது நகம் தாங்கும் அளவிற்கு சூடானால் அதில் இரண்டு லவங்கத்தை சேர்க்கவும். அந்த நீரை உடனே லோட்டாவில் ஊற்றி குடித்து விட்டு உறங்கவும்.
இதனால் கிடைக்கும் பலன்கள் எனில் மலச்சிக்கல் அசிடிட்டி போன்ற வயிறு பிரச்சனைகள் ஒழியும். இந்த நீர் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும் முகத்தில் மறுவுகள் தோன்றுவதையும் லவங்கம் தடுக்கும். சூடான லவங்க நீரை குடித்தால் பல் வலி குணமாகும். பல் வலிக்கு வலியுள்ள பல் மீது லவங்கத்தை அப்படியேயும் வைக்கலாம். தொண்டை வலி இருப்பவர்களும் லவங்க நீரை குடித்தால் வலி குறையும். கை மற்றும் கால்கள் நடுக்கத்தால் பாதிக்கப்பட்டோர் இரவு உறங்கும் முன் இரண்டு லவங்கத்தை உண்டால் நடுக்கம் இல்லாது போகும். லவங்கத்தை தினமும் பயன்படுத்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இன்றைய கொரோனா தொற்று காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியம் எனவே இதற்கு லவங்கத்தை தாராளமாக பயன் படுத்தலாம். இருமல் சளி வைரல் தோற்று , பிரான்கெடிஸ் , சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளோர் லவங்கத்தை பயன் படுத்தினால் இவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.