லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு, ஜூலை 31 – ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்டரில் இர்ஷாத் அகமது பட் என்ற பயங்கரவாதியை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர், ஏகே ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இர்ஷாத் அகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.