லாக்டவுன் செய்யும் திட்டம் இல்லை


பெங்களூர்,ஏப்.13- கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் செய்யும் திட்டம் இல்லை என்று முதல்வர் எடியூரப்பா கூறினார். இன்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடித்தல் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தல் முக கவசம் அணிதல் போன்றவை கட்டாயம் கடைப்பிடிக்கப்பம் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் செய்யும் திட்டம் இல்லை. கர்நாடக மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில்
நான் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் முடித்துவிட்டேன். . நாளை பகல் 12 மணிக்கு பெல்காமின் கோகாக் செல்கிறேன்.. மூன்று தொகுதி இடைத்தேர்தலிலா பிஜேபி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வர் எடியூரப்பா கூறினார்.