லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: நவம்பர். 30 – தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்னம், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து எம்சாண்ட், ஆற்று மணல் போன்றவற்றை சென்னைக்கு எடுத்து வரும்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சுங்கவரியாக செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் தொழில் அழியும் சூழல் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள 26 காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதோடு, சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும்.