லாரி கவிழ்ந்து ஒருவர் சாவு ஒருவர் படுகாயம்

பெங்களூர்: ஜூலை . 22 – லாரி உருண்டதில் அதில் இருந்த மர திம்மைகள் பக்கத்தில் வந்து கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது விழுந்ததில் ஒருவர் இறந்துள்ள மற்றும் மற்றொருவர் படு காயமடைந்துள்ள துயர சம்பவம் இன்று அதிகாலை நாகரபாவி வளைய சாலையில் நடந்துள்ளது . தமிழ் நாட்டை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த சுகேஷ் (35) என்பவர் இந்த விபத்தில் இறந்தவர். இதில் காயமடைந்த டேவிட் என்பவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் உயிராபத்திலிருந்து தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. லக்கரேவுக்கு செல்லவென அதிகாலை 5.30 மணியளவில் நாகரபாவி வளைய சாலையில் பைக்கில் சுகேஷ் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த வீதியில் லாரியில் இருந்த மர திண்டுகள் சிதறி விழுந்திருந்தன . இந்த மர திண்டுகள் மற்றும் உருண்டு விழுந்த லாரியை தூக்கி நிறுத்திய காமாட்சிபாள்யா போக்குவரத்து போலீசார் அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்கள் என டி சி பி குலதீப் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். இதே போல் நெலமங்களா தாலூகாவின் டாபர்ஸ் பெட்டில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது டெம்போ ட்ராவலர் வாகனம் மோதியதில் நான்கு பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பெண் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் ஆகிய நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து டாபர்ஸ் பெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.