லாரி கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் சாவு

பெங்களூரு, மே 7:
கற்கள் ஏற்றிச் சென்ற கேன்டர் லாரி கவிழ்ந்து கற்களுக்கு அடியில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர்.
சிக்கதிருப்பதி, மாலூர், கோலார் பகுதியில் இருந்து மன்சேனஹள்ளி நோக்கி கற்களை ஏற்றிச் சென்ற‌ கேன்டர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், கேன்டரின் பின்புறம் ஏ அமர்ந்திருந்த தொழிலாளர்கள், கற்களுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர் மற்றும் முகவரி கண்டறியும் பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது,
ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வரவில்லை. ஆம்புலன்ஸ் வந்திருந்தால் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.சிக்கபள்ளாப்பூர் ஊரக போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.