லாரி மீது கார் மோதியதில் அமேசான் மேலாளர் சாவு

பெங்களூர் : டிசம்பர் : 20 – மாகடி வீதியின் நைஸ் வீதி சந்திப்பில் இன்று அதிகாலை நின்றிருந்த லாரி மீது பின்பக்கமாக வேகமாக வந்த கார் மோதியதில் அமேசான் நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் அதே இடத்தில் இறந்துள்ளார். ஹெச் எஸ் ஆர் லே அவுட்டில் வசித்து வந்த சந்தோஷ் (35) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்தவர் . பல வருடங்களாக இவர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிவந்துள்ளார் . இரவு வேலை முடித்து காரில் வீட்டுக்கு அதிகாலை 4.15 மணியளவில் காரில் நைஸ் சந்திப்பு அருகில் சென்றுகொண்டிருந்தபோது பனி மூட்டத்தால் சாலையில் நின்றிருந்த லாரி சரியாக தென்படாத நிலையில் பின் பக்கமாக மோதியுள்ளது . இந்த மோதலின் தீவிரத்தால் சந்தோஷ் adhe இடத்தில் உயிரிழந்ததுடன் காரின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. தகவல் அறிந்த காமாட்சி பாளைய போலீசார் விரைந்து வந்து இறந்தவர் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.