லாரி மீது கார் மோதி டாக்டர் பலி

பெலகாவி : ஜனவரி. 10 – சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் அதே இடத்தில் இளம் மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு எம் பி ஏ மாணவர்கள் படு காயமடைந்துள்ள சம்பவம் நகரின் எடியூரப்பா மார்கத்தில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. பாகல்கோட்டே மாவட்டத்தின் ஜமைகண்டியை சேர்ந்த இளம் மருத்துவர் சௌரப் காம்பலே (25) என்பவர் இந்த விபத்தில் அதே இடத்தில் உயிரிழந்தவர். தவிர ஜமக்கண்டியை சேர்ந்த கிரிஷ் க்ரெமன்னவரா (25) மற்றும் சேத்தன் தாரிகௌடா (25) ஆகிய இருவர் படு காயங்கள் அடைந்த நிலையில் கே எல் ஈ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாயுள்ளது. இவர்கள் மூவரும் இரவு பார்ட்டி முடித்து கொண்டு திரும்பிக்கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த கார் லாரி மீது மோதியுள்ளது. இந்த மோதலின் விளைவாக கார் மூன்று நான்கு முறை உருண்டுள்ளது. சம்பவ இடத்திற்கு பெலகாவி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே வேளையில் கிளியால் ஏற்பட்ட மின்சார கசிவால் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் விவசாயி ஒருவர் இறந்துள்ள சம்பவம் மண்டியா மாவட்டத்தின் நாகமங்களா தாலூகாவின் ஹலிசந்திரா என்ற கிராமத்தில் நடநதுள்ளது . இந்த கிராமத்தில் வசித்து வந்த நஞ்சேகௌடா (50) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்த விவசாயி. இன்று அதிகாலை தன்னுடைய நிலத்தை பார்த்துவிட்டு வர நஞ்சேகௌடா சென்றபோது மின் கம்பி மீது கிளி ஒன்று பறந்து வந்து உட்கார்ந்த போது மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அருந்த மின் கம்பி நஞ்சேகௌடா மீது விழுந்ததில் அவர் மின்சாரம் தாக்கி அதே இடத்தில உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு மின் துறை அதிகாரிகள் வந்து பரிசீலனை நடத்தியுள்ளனர். தவிர போலீஸ் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது