லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

பெங்களூர்,மார்சா 9-
ஓசகோட்டை தாலுக்கா தேசிய நெடுஞ்சாலை 75ல் உள்ள கோட்டிபுரா கேட் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் லாரி மீது மோதியது. இதில்காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவரின் பெயர், முகவரி உடனடியாக தெரியவில்லை.இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்