லால்பாக்கில் குவிந்த குப்பைகள் அகற்றம்

பெங்களூர், ஆக .17-
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ,லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது. அப்போது பல லட்சம் பேர் பார்வையிட வந்தார்கள். அவர்களால் குப்பைகளும் அதிக அளவு குவிந்தன. அதை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டப்பட்டது.
லால் பாக்கில் சுதந்திர தின விழாவுக்கு மறுநாள் கழிவுகளை சேகரிக்கவும் அதனை தனித்தனியாக பிரிக்கவும் ஏராளமானோர் ஈடுபட்டனர். இந்த கண்காட்சியை காண 8 லட்சத்து 26 ஆயிரம் பேர் பார்வையிட வந்தார்கள். செவ்வாய்க்கிழமை மட்டும் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் வந்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை 3:30 மணி வரை பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணியில், அதிகாரிகளும் தன்னார்வலர்களும் தீவிரமாக இறங்கினார்கள். இந்த குப்பைகளை மறுசுழற்சிக்காக கோணிப்பை மூட்டைகளில் கட்டி ,வேன்கள் மூலம் அகற்றினர்.நாண் ஓவன் பாலிவுட் பைகள் குறைந்தது 500 முதல் 600 வரை இருந்தன. அவர்கள் ஐஸ்கிரீம் குச்சிகள், ரேப்பர்கள், பாட்டில்கள், உலோக கேன்கள் என கழிவுகளை சேகரித்து வெளியேற்றப்பட்டது.
பூங்காவில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகளில் அதிக அளவு குப்பைகள் நிரம்பியிருந்தது. அவைகளை எல்லாம் அகற்றப்பட்டது.
கண்ணாடி மாளிகைக்குச் செல்லும் சாலையில் முற்றிலும் சுத்தமாக இருந்தாலும், அதன் புற வழிகளில் மற்றும் கிரீன் பாயிண்ட் பகுதிகளில் சிறிய பிளாஸ்டிக் குவியல்கள் காண முடிந்தது. பிளாக் டிரைவுகளை நடத்தும் பிளாக் மேன் நாகராஜ் கூறுகையில் அதிகாரிகள் தன்னார்வ தொண்டர்கள் சேவைகளை குறைத்து மதிப்பிட முடியாது. புதன்கிழமை மதியம் பூங்காவில் சுத்தமாக இருந்தது. ஆனால் மேற்கு வாயிலில் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் பாதையில் காகிதங்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் என பலவும் காண முடிந்தது.மலர் கண்காட்சியின் போது சஹால், பியூட்டிஃபுல் பெங்களூர் ஆகிய தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 50 பேரை வரவழைத்து துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
பிளாஸ்டிக் பாட்டில்களை பூங்காவுக்குள் அனுமதிக்கவில்லை. கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வழங்கினோம்.
1200 ஸ்டீல் தட்டுகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் கழிவுகளின் அளவு மிகவும் குறைந்தது .12 நாட்கள் நடந்த கண்காட்சியில் குவிந்த குப்பைகளை சுத்தம் செய்ய 100 தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். மைக்ரோ லெவல் துப்புரவுப் பணி
ஓரிரு நாளில் முடிவடையும் என தெரிகிறது .