லால்பாக் மலர் கண்காட்சியை காண குவிந்த மக்கள்

பெங்களூரு, ஆக. 14:
வார இறுதி நாட்களில் பெங்களூரு லால்பாக் மலர் கண்காட்சியை காண மக்கள் அதிக அளவில் ஆர்வமாக குவிந்தனர்.
பெங்களூரு லால்பாக் மலர் கண்காட்சியை சனிக்கிழமை மாலை வரை 3.59 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மொத்த டிக்கெட்டுகள் ரூ. 1.8 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன‌.நிகழாண்டு சுதந்திர தின மலர் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை லால்பாக் தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமை 20,000 குழந்தைகள் உட்பட குறைந்தது 1.25 லட்சம் பேர் தோட்டத்தை பார்வையிட்டதாக நிகழ்ச்சியை நன்கு அறிந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.80.5 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகளை ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.லால்பாக் மலர் கண்காட்சியை சனிக்கிழமை மாலை வரை 3.59 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மொத்த டிக்கெட்டுகள் ரூ. 1.8 கோடிக்கு விற்கப்பட்டன. வார இறுதியில் இந்த எண்ணிக்கை 4,84,049 பார்வையாளர்களாகவும், டிக்கெட் விற்பனையில் ரூ.2,60,95,000 ஆகவும் உயர்ந்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில், லால்பாக் மெட்ரோ நிலையத்தில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. மக்கள் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் வரிசையில் நின்றனர். டோக்கன்கள் மற்றும் பேப்பர் டிக்கெட்டுகள் உள்ளவர்கள் தானியங்கி வாயில்களுக்கு அடுத்ததாக தனி வரிசையில் அனுப்பப்பட்டனர்.
அங்கு மெட்ரோ ஊழியர்கள் சரிபார்த்து அவற்றை சேகரித்தனர். டிக்கெட் விலை பெரியவர்களுக்கு ரூ.80 ஆகவும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.உற்சாகமான குடும்பங்களும் குழந்தைகளும் நூறு மீட்டருக்கும் அதிகமான நீண்ட வரிசைகளை உருவாக்கினர். கண்ணாடி மாளிகைக்குள் பார்வையாளர்கள் ஒழுங்காக நுழைவதற்கு காவல் துறையினர் சமாளித்து, நடவடிக்கை மேற்கொண்ட‌னர். ஆக. 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று லால்பாக் மலர்க்கண்காட்சியை காண சுமார் 2.5 லட்சம் பேர் வருவார்கள்