லெஸ்பியன் தோழியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியை தருகிறது இளம்பெண் பேட்டி

திருவனந்தபுரம், ஜூன் 1 கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவரது தோழி பாத்திமா நூரா. இருவரது பெற்றோரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தனர். இதனால் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படித்தனர். அப்போது ஏற்பட்ட நட்பு, இவர்களின் கல்லூரி வாழ்க்கையின் போதும் தொடர்ந்தது. இதற்காக இருவரும் தனியாக தங்கி இருந்தபோது இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு அது லெஸ்பியன் உறவாக மாறியது. ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவருக்கும் இடையேயான லெஸ்பியன் உறவு பற்றி தெரிந்துகொண்ட உறவினர்கள், பாத்திமா நூராவை கேரளா அனுப்பி விட்டனர். இதனை அறிந்த ஆதிலா நஸ்ரின், தோழியை தேடி கேரளா வந்தார். இங்கு பாத்திமா நூராவை கண்டுபிடித்தார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக தங்கி இருந்தனர். அவர்கள் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த பாத்திமா நூராவின் உறவினர்கள், அங்கு சென்று பாத்திமா நூராவை வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்.
பாத்திமா நூராவை கடத்தி சென்ற உறவினர்கள், அதன்பின்பு அவரை சந்திக்க ஆதிலா நஸ்ரினை அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதிலா நஸ்ரின், தோழியை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். அதோடு தங்கள் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதாகவும், எனவே தாங்கள் சேர்ந்து வாழ கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு ஆதிலா நஸ்ரின் மற்றும் அவரது தோழி பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது இவ்வாறு அவர் கூறினார்.