வகுப்பறைகளில் கட்டாய முககவசம்

பெங்களூர், ஜன.4-
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்புக்கு எச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிய வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கப்பட்டுள்ளது.
வகுப்பறைக்குள் கட்டாயம் முக கவசம் அணிதல் வேண்டும். திறந்தவெளி மற்றும் மைதானங்களில் இருக்கும் போது முக கவசத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என்று, அறிவுரை கூறப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் சேர்ந்த நிறுவனங்கள், தங்களின் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்புக்கு முக கவசங்களை தங்கள் பிள்ளைகள் அணிந்தாக வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இது கொரோனா தடுப்புக்கான எச்சரிக்கை நடவடிக்கை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளனர்.
எனவே பெரும்பாலான மாணவர்கள் முக கவசம் அணிந்து வருகின்றனர்.
குளிர்க்காலம் என்பதால் ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படுவது உண்டு. இந்நிலையில், தொற்று பாதிப்பு பரவலாகிவிடும் என்ற அச்சமும் இருப்பதால் அனைவருமே முக கவசம் அணிகின்றனர்.