பெங்களூரு, செப்டம்பர் 4- அப்பிகெரே அசோக் ஐடிஐ கல்லூரி அருகே பிராக்டிகல் வகுப்பில் மெட்டல் பிரச்னையில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது.
காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பிகெரே அசோக் ஐடிஐ கல்லூரி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவர் பாசி முகமது (21) என்பவரை மாணவர் பாலகிருஷ்ணாரெட்டி (21) உள்பட 2 பேர் கத்தியால் குத்தினர்.
காயமடைந்த மாணவர் பாசி முகமது உடனடியாக ராஜலட்சுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்பட்டது. வன்முறை தொடர்பாக 2 பேரை கங்கம்மாகுடி போலீசார் கைது செய்து ஏசிபி மேரி ஷைலஜா தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.