வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை நவ.17-
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால் தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.