வங்கியில் வைக்கப்பட்ட தங்க நகைகள் திருட்டு

பெங்களூர் : ஜனவரி 13 – தனியார் நிதித்துறை ஊழிய வாடிக்கையாளர்கள் சிலர் தங்கள் வங்கிகளில் அடகு வைத்திருந்த 85.78 லட்சங்கள் மதிப்பிலான தங்க நகைகள் அபகரிக்கப்பட்டிருப்பதுடன் இது குறித்து கோனன்குண்டே பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் . கோனன்குண்டேயின் கே எள் எம் அக்சிவா பின் வேஸ்ட் லிமிடட் நிறுவனத்தை sசேர்ந்த குற்றவாளி ஊழியர்கல் ஒரிஇருவர் சேர்ந்து திருடியுள்ள தங்க நகைகளை அடமானம் வைத்து போலி ஆவணங்கள் தயாரித்து கடன் பெற்றிருப்பதுடன் இது குறித்து வட்டார மேலாளர் லக்ஷ்மன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார் . இது தொடர்பாக ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு பதிவாகி விசாரணை நடந்து வருகிறது . இந்த நிறுவனத்தின் கோனன்கொண்டே கிளை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவரும் மண்டேஸ்வாமி என்பவர் 444.56 கிராம் தங்கம் அடகு வைக்க பட்டுள்ளதாக காட்டி கொள்ள 14 தங்க கடன் ஆவணங்களை போலியாக தயாரித்து தன்னுடைய சொந்த செலவுக்காக 17.92 லட்ச ரூபாயை பயன்படுத்த்தியிருப்பதுடன் கணக்கில் வெறும் 123 கிராம் தங்கம் மட்டுமே இருந்த நிலையில் 1291.21 கிலோ தங்கம் இருப்பதாக காட்ட 23 போலி கடன் பாத்திரங்களை தயாரித்துள்ளார். மீத தங்கங்கள் காணாமல் போயுள்ளன. பிரிகேட் மில்லேனியம் கிளையின் மேலாளர் சந்தோஷ் என்பவருடன் சேர்ந்து மண்டீசுவாமி தன தன் கிளையில் அடகு வைத்த தங்க நகைகளை திருடி வாடிக்கையாளர் சாகர் என்பவருக்கு கொடுத்துள்ளார். இவர் அங்கு 19.26 கிராம் தங்க நகைகளை 77000 மற்றும் 18 கிராம் தங்க நகைகளை 73000 ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தார். இது தவிர மண்டேஸ்வாமி தன் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள்அடகு வைத்திருந்த தங்க நகைகளை திருடி அவற்றை பசவராஜ் என்பவருக்கு கொடுத்துள்ளார். அவர் அதே கிளை ஊழியர் புஷ்பா என்பவருடன் சேர்ந்து இதே வங்கியில் தலகட்டபுர கிளையில் அடகு வைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மண்டேஸ்வாமி , பூஜா , சந்தஷ் குமார், அம்பிகா , சாகர் , பசவராஜ் , சிந்து , மற்றும் சாக்கம்மா ஆகியோருக்கு எதிராக வழககு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .