வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.19 குறைப்பு

சென்னை: மே 1:
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1,930ல் இருந்து ரூ.1,911 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டெல்லியில் 1745.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1859 ரூபாயாகவும், மும்பையில் 1698.50 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.