வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை: நவ.15: பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே நவம்பர், டிசம்பர்ஆகிய மாதங்களில் வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் அண்மையில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர்-திருநெல்வேவி இடையே வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.