வந்தே பாரத் ரயில் சேவை நேரம்மார்ச் 11 முதல் மாற்றம்

பெங்களூரு, பிப். 29: பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் நேரம் மார்ச் 11 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர்-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான சேவை 2 மணி 25 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும். பயண நேரம் 6 மணி 25 நிமிடங்களாக இருக்கும். இதற்கு முன் பயண நேரம் ஆறரை மணி நேரமாக இருந்தது. அதே போல் பெங்களூரிலிருந்து, கோயம்புத்தூருக்கு திரும்பும் பயணம் 40 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கும். இதற்கான பயண நேரம் 6 மணி 35 நிமிடங்கள் ஆகும். இது முன்பை விட 5 நிமிடங்கள் கூடுதலாகும்.
ரயில்வே வாரியம் திருத்தப்பட்ட நேரங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று தென்மேற்கு ரயில்வேயின் (SWR) பெங்களூரு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில் எண் 20642 கோயம்புத்தூரில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் ரயில், மாறாக‌ காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு, 11.30 மணிக்குப் பதிலாக, பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை வந்தடையும். இடையில் நிறுத்தங்களில் புறப்படும் நேரம் திருப்பூர் காலை 8.05, ஈரோடு காலை 8.45, சேலம் காலை 9.35, தர்மபுரி காலை 10.53, ஓசூர் பிற்பகல் 2.05 ஆகும்.
ரயில் எண் 20641 பெங்களூரு கண்டோன்மெண்டில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு பதிலாக‌ பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு கோயம்பத்தூரை இரவு 8 மணிக்கு பதிலாக‌ இரவு 8.45 மணிக்கு சென்றடையும். இடையில் உள்ள நிறுத்தங்களிலிருந்து புறப்படும் நேரம் ஓசூர் பிற்பகல் 3.12, தருமபுரி மாலை 4.24, சேலம் மாலை 6, ஈரோடு மாலை 6.50, திருப்பூர் இரவு 7.33 ஆகும்.