வன்முறை தொடர்பாக 400 பேர் கைது

லக்னோ : ஜூன். 13 – முகமது நபிகள் நாயகம் குறித்து பி ஜே பி முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபூர் ஷர்மா நவீன் குமார் ஜிந்தால் பேசிய பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தின் பல இடங்களில் நடந்த வன்முறைகள் தொடர்பாக நானூறுக்கும் மேற்பட்டோர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் , ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் இறங்கியது . மேற்கு வங்காளத்தின் நாதியா மாவட்டத்தின் பெதுயாதஹரி ரயில் நிலையத்தில் போராட்டக்கார கும்பல் ரயிலை சேதப்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் மொத்தம் 316 பேர் , மேற்கு வங்காளத்தின் ஹௌரா மொர்ஸிராபாத் மாவட்டங்களில் 100 பேரும் , போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . இதே போல் ரான்ஞ்சியில் 25 பேர் உட்பட இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் 42 முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தின் 9 மாவட்டங்களில் நடந்த கலவரங்கள் தொடர்பாக 13 வழக்குகள் பதிவாகியுள்ளன. தவிர எட்டு மாவட்டங்களில் இதுவரை 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல் ப்ரயாக்ராஜ் மாவட்டத்தில் 91 பேர் கைதாகியுள்ளனர்.