வன காவலரை கொன்ற யானை பிடிப்பட்டது

மடிக்கேரி, செப்டம்பர் 6-
மடிக்கேரி நகரின் புறநகர் பகுதியான கெடக்கல் பகுதியில் வனக்காவலரை கொன்ற காட்டு யானை இறுதியாக பிடிபட்டது.
பமடிக்கேரி தாலுகா முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு குஷாலநகர் வனத்துறை அதிகாரிகளால் இன்று இந்த யானை பிடிக்கப்பட்டது
ஆகஸ்ட் 4 ஆம் தேதி கிரிஷ் என்ற வனக் காவலரை இந்த யானை கொன்றது. பிடிபட்ட யானை துபாரே யானைகள் முகாமுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. முன்னதாக இந்த யானை மதிகேரியில் பல்வேறு இடங்களில் சுற்றி தெரிந்தது இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர் இதை பிடிக்க வன காவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது