வன காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் சந்தன மரத் திருடன் பலி

பெங்களூரு, ஆக.30- பெங்களூர் பன்னர்கட்டா வனப்பகுதியில் உள்ள கல்கெரே என்ற இடத்தில் சந்தன மரங்களை திருடிய நபர் மீது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கியால் சுட்டனர் இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வனப்பகுதியில் பல நாட்களாக சந்தன மரங்கள் திருடுபோவதால், வனத்துறையினர் தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சந்தன மரங்களை திருட 2 பேர் வந்துள்ளனர் அவர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தனர் அப்போது அந்தப் பக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை காவலர்களுக்கு மரம் வெட்டும் சத்தம் கேட்டது. அவர்களை சரண் அடையுமாறு வனத்துறை ஊழியர்கள் எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் சரண் அடையாமல் வனக் காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது வன காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் தப்பி ஓடிவிட்டார். உயிரிழந்தவர் மாலூரை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. பெங்களூரு ஊரக எஸ்பி மல்லிகார்ஜுன் பாலதாண்டி சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பவம் நடந்த இடத்தில் அதிகமான சந்தன மரங்கள் உள்ளன அதேபோல் இது வனவிலங்குகள் அதிகமாக வசிக்கும் பகுதி. இந்த இடத்தை குறிவைத்து சந்தன மரத் திருடர்கள் அடிக்கடி வந்து சந்தன மரங்களை வெட்டி செல்கின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் சந்தன மர கட்டைகள் மற்றும் அரிவாள்கள் கண்டெடுக்கப்பட்டன. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டது தப்பி ஓடிய ஒருவர் எந்த வழியாக சென்றார் அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.