வயிற்று கொழுப்பை கரைக்கும் வீட்டு மருந்துகள்


சிலருக்கு உடலில் கொழுப்பு இல்லாவிட்டாலும் வயிறு பெருத்து இருப்பதை பார்த்திருக்கிறோம். வயிற்றின் கீழ் பகுதியை உடம்பின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டால் வெளியே வந்திருப்பது தெரியும். சாமான்யமாக இன்றைய காலகட்டத்தில் அதிகமானோருக்கு இத்தகைய பிரச்சனை உள்ளது. இந்த சமயத்தில் இந்த பிரச்னையை சரி செய்வதற்கு முன்னர் இந்த வயிற்று உப்பல் எதனால் வந்தது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்படி தெரிந்து கொண்டால் நம் தினசரி நடவடிக்கைகளை அதற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும்.
சரியான தூக்கம்: நாம் உறங்கும் மற்றும் எழுந்துகொள்ளும் நேரங்கள் முறையாக இல்லை எனில் அது குறித்து சற்று கவனம் செலுத்த வேண்டும். உறக்கம் வராத காரணத்தால் நம் உடல் மற்றும் மனதளவில் அது பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் நம் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. தவிர நாம் உணவை வேகமாக மற்றும் அவசரமாக உண்டாலும் இதனாலும் வயிற்றில் கொழுப்பு சேர வாய்ப்புகள் உள்ளது. எண்ணெய் ,மாவுகள் மற்றும் சர்க்கரையை உண்பதை தவிர்க்கவும். நம் ஆகாரத்தில் எண்ணெய் , மாவு மற்றும் சர்க்கரையை இரவு நேரங்களில் எளிதாக ஜீரணம் செய்ய இயலாது. இதனால் வயிற்றில் கொழுப்பு சேர வாய்ப்புகள் உள்ளது. தவிர ஒரே நேரத்தில் அதிகளவு உணவு உண்ணக்கூடாது. பலரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை உண்கிறார்கள். அந்த வகையில் பசியை போக்குவதற்கும் கூடுதலாக உண்பார்கள். அதுவே சில பாதிப்புகளுக்கும் காரணமாகிவிடும். ஒரே நேரத்தில் அதிகளவு உண்பதை விட அவற்றை குறைத்து அடிக்கடி ஏதாகிலும் குறைந்த அளவில் உண்டு வரலாம் . .
தண்ணீர் குடிப்பது: வயிற்றின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம் எனில் நாம் நீரில் இருந்து விலகி இருப்பது அல்லது அதிகஅளவில் நீர் குடிக்காமல் இருப்பது. அதனால் நாம் அடிக்கடி போதுமான அளவில் நீர் குடித்துக்கொண்டிருந்தால் வயிற்றில் கொழுப்பு சேர்வது பெருமளவில் குறையும்.
தினசரி எளிதான உடற்பயிற்சி : சில எளிமையான உடற்பயிற்சிகள் வயிற்று உப்பலை தவிர்க்கும். தரையில் நேராக படுத்துக்கொண்டு பின்னர் இரண்டு கைகளை தலையின் கீழ் வைக்கவும். பின்னர் தலையை சற்றே மேலுக்கு தூக்கவும். பின்னர் கால்களை மடித்து பின்னர் விரிக்கவும். இந்த பயிற்சியை அடிக்கடி செய்து வந்தால் வயிற்றில் கொழுப்பு சேராது.
எலுமிச்சை மற்றும் கொத்துமல்லி டீ : வயிற்று கொழுப்பை அகற்ற பலரும் க்ரீன் டீ அருந்துவார்கள். ஆனால் வயிற்றின் கொழுப்பை குறைக்க எலுமிச்சை மற்றும் கொத்துமல்லி கலந்த டீ நல்ல விளைவுகளை தரும். அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இந்த டீயை குடிப்பது மிகவும் நல்லது.