வயிற்றெரிச்சலுக்கு வீட்டு மருந்து

பொதுவாகவே நம் வயிற்றில் ஒரு மாதிரியான எரிச்சலை பல சமயங்களில் அனுபவித்திருப்போம். ஆனால் நாம் அதை ஒரு சாதாரணமான பிரச்சனை என புறக்கணித்துவிடுவோம். பெருங்குடலின் உள் பகுதியில் உருவாகும் பிரச்சினையே வயிற்று எரிச்சலுக்கு காரணமாகும். குடலின் எரிச்சலை தீர்க்க தயிர் இயற்கை நமக்களித்துள்ள மிக உன்னதமான மருந்தாகும். .தயிரில் உள்ள ஜீரண சக்தியை கூட்டும் நல்ல பாக்டீரியாக்கள் நம் குடல்களுக்குள் பி ஹெச் அளவை சுமுகமான அளவில் இருக்க உதவுகிறது. இந்த பாக்டீரியாக்கள் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை உற்பத்தி செய்து குடல்களில் உள்ள விஷ ஜந்துக்களை நாசமடைய செய்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு கப் அளவிற்காவது தவறாமல் மோரை குடித்துவரவும். நம்முடைய அன்றாட உணவில் பழங்கள் , பச்சை காய் வகைகள் அல்லது இவற்றால் தயாரிக்கப்பட்ட சலாடுகள் ஆகியவற்றில் தயிரை கலந்து உட்கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதே போல் உருளைக்கிழங்கில் உள்ள நல்ல அம்சங்கள் நம் உணவை சீராக ஜீரணிக்க தக்க அமிலங்களை சுரப்பதற்கு மிகவும் நல்லது. அதிலும் குடல்களில் புண் உண்டாகியிருந்தால் உருளைக்கிழங்கு சுரக்கும் இந்த அமிலம் குடல் புண்ணை தீர்த்து வைப்பதற்கு மிகவும் உதவுகிறது. ஒரு பச்சை உருளைக்கிழங்கை பிசைந்து சாறு எடுத்து சேமிக்கவும். இந்த சாறை நாளொன்றுக்கு மூன்று முறை குடித்து வந்தால் குடல் புண்கள் காணமல் போகும். இரண்டு பெரிய ஸ்பூன் அளவில் அரிசியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். அரிசி முழுதுமாக வெந்த பின்னர் தீயை அணைத்து அப்படியே நீருடன் ஆற விடவும். நாம் குடிக்கும் அளவிற்கு அரிசி நீர் ஆரிய பின்னர் இதை வடி கட்டி கொள்ளவும். இந்த நீரை நாளொன்றுக்கு ஒன்றல்லது இரண்டு முறை குடித்து வந்தால் குடல் புண்கள் மாயமாகிவிடும். நம் வீடுகளில் மிக்ஸிகள் இருப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் இரண்டு காரட் களை துண்டுகளாக்கி அவற்றை மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து கொள்ளவும். அல்லது இரண்டு காரட்களை நீரில் உப்பு போடாமல் வேக வைத்து கொள்ளவும். அது மிருதுவான பின்னர் நசுக்கி பசை ஆக்கிக்கொள்ளவும். இந்த காரட் பசையை தினசரி ஒரு முறை உட்கொண்டாலும் குடலின் புண்களுக்கு நல்ல நிவாரணமாகும். குடல் புண்கள் மற்றும் எரிச்சல் முழுதும் குணமாகும் வரையில் இதை உட்கொள்ளலாம். ஒரு நல்ல பழுத்த வாழைப்பழம் மற்றும் ஒரு பெரிய ஸ்பூன் தேன்கலந்து தினசரி ஒரு முறை உட்கொண்டுவந்தாலும் குடல் புண் மற்றும் வயிற்றெச்சலுக்கு நல்ல உபகாரமாகும்.