வரதட்சணை கொடுமை குழந்தையுடன் தாய் தற்கொலை

ஹாசன் : நவம்பர். 21 – குழந்தையுடன் தாயும் சேர்ந்து கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஹொலேநரசீபுரா தாலூகாவின் தொட்டகுஞ்சேவுகோப்பளு என்ற கிராமத்தில் நடந்துள்ளது. தொட்டகுஞ்சேவுகோப்பளு கிராமத்தை சேர்ந்த பவ்யா (23) மற்றும் அவளுடைய குழந்தை வேதாந்த் (3) ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் . கடந்த 19 அன்று பவ்யா தன்னுடைய மகனுடன் கணவனின் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் பின்னர் அவர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று சென்னராயப்பட்டனா தாலூகாவின் கெஜ்ஜகாரனஹள்ளி அருகில் கால்வாயில் குழந்தையின் உடல் மிதந்ததுடன் பவ்யாவின் உடல் தொட்டகுஞ்சேவு கிராமத்தின் அருகில் ஏரியில் கிடைத்துள்ளது. இறந்து போன பவ்யாவின் கணவன் மற்றும் அவனுடைய தாய் அக்கயம்மா ஆகியோருக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட பவ்யாவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கேஜ்ஜேகாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பவ்யாவை தொட்டகுஞ்சேவுகோப்பளு கிராமத்தை சேர்ந்தஸ்ரீனிவாஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. பவ்யா அழகாக இருந்ததால் தனக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம் என ஸ்ரீனிவாஸ் குறும்பத்தினர் தெரிவித்திருந்தனர். ஸ்ரீனிவாஸ் ட்ராக்டர் நிறுவனந்த்தில் பணியாற்றி வந்துள்ளான். திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இருவரும் மிகவும் அன்யோன்யமாகவே இருந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.இந்த நிலையில் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவனுடைய தாயார் அக்கயம்மா வரதட்சணை பணம் கொடுக்குமாறு பவ்யாவை வற்புறுத்திவந்த நிலையில் பவ்யா தன் குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.