வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடன்

டெல்லி: ஜூன் 10-
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அங்கு தொழில் வளர்ச்சி முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் போர் காரணமாக அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான், தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, பாகிஸ்தானின் கடன், இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று (ஜூன் 09) வெளியிடப்பட்ட பாகிஸ்தானின் பொருளாதார ஆய்வறிக்கையில், “பாகிஸ்தானின் கடன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான், எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, பாகிஸ்தான் நாட்டின் மொத்த பொதுக்கடன் மார்ச் 2025-க்குள் பாகிஸ்தான் ரூபாயில் சுமார் 76,007 பில்லியனை எட்டியுள்ளது. (இந்திய ரூபாயில் ரூ.23.1 டிரில்லியன் மற்றும் 269.344 அமெரிக்க டாலர்கள்). இது நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.