வராத்திரி முன்னிட்டு மார்ச் 8ம் தேதி குமரியில் விடுமுறை

குமரி:மார்ச் 1- சிவராத்திரியை ஒட்டி வரும் மார்ச் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 08.03.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
08.03.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.03.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் (அறிவிக்கப்படவில்லை என்பதால் 08.03.2024 அன்று தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவித்துள்ளார்.