வரி மோசடி – ஐ.டி. சாட்டை

பெங்களூர்: ஜூன். 1 தொழிலதிபர்கள் , ரியல் எஸ்டேட் அதிபர்கள் , வியாபாரிகள் உட்பட வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளவர்களுக்கு எதிராக சோதனைகளை தொடர்ந்துள்ள வருமான வரி துறை (ஐ டி ) அதிகாரிகள் பெங்களூர் உட்பட மாநிலம் முழுக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் திடீரென சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூர் உட்பட மாநிலத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் இன்று அதிகாலையிலிருந்தே சோதனைகள் நடத்திவரும் வருமான வரி துறை அதிகாரிகள் பெருமளவிலான ஆவணங்கள் , பத்திரங்கள் , ஆகியவற்றை கைப்பற்றி பரிசீலனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானவரித்துறையின் ஆறு நூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுக்கள் ஒரே நேரத்த்ல் மாநிலம் முழுக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகள் , அலுவலகங்கள் மீது சோதனையில் ஈடுபட்டு சொத்துக்கள் , விலை மதிப்புள்ள பொருட்கள், தங்கம் , வெள்ளி , நகைகள் மற்றும் பொருட்கள் குறித்து தகவல்கள் சேகரித்து வருகிறார்கள். பல நாட்களாகவே திட்டமிட்டு பின்னர் தேடுதல் அனுமதியையும் உடன் கொண்டு வந்துள்ள அதிகாரிகள் தொழிலதிபர்கள் , ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் உட்பட வருமான வரி ஏய்ப்பு செய்துள்ள மற்ற வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்திவருகின்றனர். வருமானத்தை மூடி மறைத்து ஐ டி ரிட்டன் செய்யாத குற்றத்தின் கீழ் சோதனைகள் நடத்தி பரிசீலனைக்கு நடந்து வருகிறது. ஐ டி ரிட்டர்னில் உள்ள வருமானத்தை விட அதிக வருமானங்கள் இவர்கள் பெற்றிருப்பது சோதனைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிகிறது. கோவா -கர்நாடகா பிரிவை சேர்ந்த ஆறு நூறு அதிகாரிகள் குழு இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. இவர்களின் கணக்கு புத்தகங்கள் , சோதிக்க பட்டு வருவதுடன் சதாசிவநகரில் உள்ள எம்பஸ்ஸி ஆர்கேட் அபார்ட்மென்ட்டில் நரபத் சிங்க் சரோடியா என்பவரின் எண் 607 கொண்ட பிளாட் மீதும் சோதனை நடந்து வருகிறது. நான்கு அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகரில் வருமான வரி மோசடி செய்துள்ள தொழிலதிபர்கள் , உட்பட 37 இடங்களில் அதிகாரிகள் சோதனைகள் நடத்தி தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்த சோதனைகள் இன்னும் தொடர்ந்து நடந்து வருவதால் அதிக தகவல்கள் இன்னும் கிடைக்க வில்லை. கடந்த மார்ச் 22 அன்று வருமான வரி துறை அதிகாரிகள் மும்பை , பூனா , தானே உட்பட நாட்டின் பல பகுதிகளில் சோதனைகள் நடத்திய பின்னர் நடக்கும் பெருமளவிலான சோதனை இதுவாகும். மார்ச் 22 அன்று ஹிரா நந்தினி குழுமத்திற்கு சொந்தமான சென்னை , பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள 24 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. வெளிநாட்டில் சொத்து சேர்த்திருப்பது சம்மந்தமாக ஹிரா நந்தினி குழுமத்தின் மீது சோதனை நடத்தப்பட்டது . இந்த குழுவின் உரிமையாளர் சகோதரர்களான நிரஞ்சன் மற்றும் சுரேந்திரா ஆகியோர் அறக்கட்டளையில் வெளிப்படுத்திய வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது. இது மட்டுமின்றி பல பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும் தற்போது தீவிர சோதனைகள் நடந்து வருகிறது.