வருமானவரித்துறை சோதனைகளில் 750 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிப்பு

பெங்களூரு : அக்டோபர் . 12 – அக்கிரம சொத்து மற்றும் வரி மோசடி குற்றம் சம்மந்தமாக முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா மற்றும் அவருடைய மகன் விஜயேந்திரா , இவர்களுக்கு நெருக்கமானவர்கள் குத்தகையாளர்கள் , மற்றும் கணக்கர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மீது வருமான வரி துறை (ஐ டி ) அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் பெரும் அளவிலான சொத்துக்கள் வெளிவந்துள்ளது. இந்த சோதனைகளில் மிக முக்கியமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், போலி பில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் சோதித்த போது மூன்று குத்தகையாளர்களின் மொத்தம் 750 கோடி சட்ட விரோத சொத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 487 கோடி ரூபாய் சட்ட விரோதமானதென்று குத்தகையாளர்களே ஒப்பு ககொண்டுள்ளனர். இன்னும் மற்ற பணம் குறித்து அதிகாரிகள் விசாணையை தொடர்ந்துள்ளனர். வருமானவரி துறை அதிகாரிகளின் சோதனைகள் குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீர்ப்பாசனம் , நெடுஞசாலைகள் திட்டத்தில் அக்கிரமம் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது என தெரிவித்தனர். நீர் வளத்துறை மற்றும் நெடுஞசாலைகள் நிர்வகிப்பு துறையில் கோடிக்கணக்கில் வரை மோசடி செய்த குற்றத்திற்காக கடந்த வாரம் மூன்று குத்தகையாளர்கள் மீது நடந்த வருமான வரி சோதனையில் சுமார் 750 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா உட்பட நான்கு மாநிலங்களின் 47 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனைகள் நடத்தியுள்ளனர். இதில் முக்கியமாக நீர்ப்பாசன துறை மற்றும் நெடுஞசாலைகளின் செயல் திட்டங்களில் கோடிக்கணக்கான வரி மோசடி சம்மந்தமாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமான உமேஷ் உட்பட மூன்று பேர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குத்தகையாளரின் வீடு ஒன்றில் 4.59 கோடி ரொக்கம், 8.67 கோடி தங்கம் , 29.83 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருள்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. மூன்று முக்கிய குத்தகையாளர்கள்சுமார் 382 கோடி ருபாய் வரையில் சட்ட விரோத விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர் . தொழிலாளர்களின் பெயர்களில் சம்பளம் மற்றும் 40 பேரில் போலி உப குத்தகையாளர்களை உருவாக்கி மோசடி செய்யபட்டுள்ளது . இந்த சோதனைகளிபோது நேரில் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களும் கிடைத்துள்ளதாக வருமான வரி துறை அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.