வருவாய் பற்றாக்குறை மானியம்ரூ.7,183 கோடி – மத்திய அரசு விடுவிப்பு

புதுடெல்லி, செப்.7- அதிகார பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக 2022-23ம் ஆண்டில் மொத்தம் ரூ.86,201 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. இதன்படி இந்த தொகையை சமமாக 12 மாத தவணைகளில் மத்திய நிதி அமைச்சகம் விடுவித்து வருகிறது. அந்த வகையில் 15-வது நிதி ஆணைய பரிந்துரைகளின்படி, 6-வது தவணையாக வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.7,183 கோடியை 14 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை விடுவிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.43,100.50 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.