வர்த்தக பயன்பாட்டுசிலிண்டர் விலை குறைப்பு

சென்னை: ஏப். 1: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.30 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.
இந்நிலையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.30 குறைந்துள்ளது.
விலை குறைப்பை அடுத்து சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1930-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமில்லாமல் ரூ.818.50க்கு விற்பனையாகிறது