வர்த்தூர் ஏரியில் மீன்கள் உயிரிழப்பு

பெங்களூரு, அக். 19: வர்த்தூர் ஏரியில் மீன்கள் உயிரிந்திருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டிக்கொண்டிருந்த வர்த்தூர் ஏரி, செவ்வாய்க்கிழமை அதன் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான உயிரற்ற மீன்கள் மிதந்ததால், கவலையும், பரபரப்பும் ஏற்பட்டதுஏரியை சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் போதே, பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் (BDA) மழைநீரை ஏரிக்குள் வர அனுமதித்தது. “கடந்த 8-10 நாட்களாக ஏரியில் மழைநீர் தேங்கி, இயற்கையாகவே ஏரி புத்துயிர் பெற்று வந்தது. இருப்பினும், கழிவுநீர் செல்லும் மாற்று வாய்க்கால் உடைந்ததால், ஏரி தற்போது மாசுபட்டு, மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார் வர்த்தூர் ரைசிங்கின் ஜெகதீஷ் ரெட்டி.
பல ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் ஏரியின் மாசுவின் கடினத்தை குறைந்த அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை ஆர்வலர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஏரியை மறு சீரமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
ஏரியை புத்துயிர் பெறுவதற்கான மேற்கொண்ட முயற்சிகளும் தற்போது வீணாகியுள்ளன. இதற்கு அத்துமீறல்களும் ஒரு காரணம். தண்ணீர் டேங்கர் மாஃபியா மற்றும் அப்பகுதியில் சட்டவிரோத கட்டுமானத்திற்கு பொறுப்பான ஆக்கிரமிப்பாளர்கள் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. மீன்கள் உயிரிழப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏரியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 25,000 இறந்த மீன்களை அகற்றுவதற்கான ஒரு பெரிய நடவடிக்கை புதன்கிழமை தொடங்கப்பட்டது. இருப்பினும் பல உயிரற்ற மீன்கள் இன்னும் ஏரியில் மிதக்கின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் என ஏரியை சுற்றி வசிப்பவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.