வள்ளிக்கிழங்கு ரொட்டி

தேவையான பொருட்கள்
300 கிராம் வள்ளிக்கிழங்கு
இரண்டு கப் கோதுமை மாவு
கால் ஸ்பூன் மஞ்சள்
அரை ஸ்பூன் கரம் மசாலா
அரை ஸ்பூன் ஆம்சூர்
கால் ஸ்பூன் அஜ்வாயின்
பச்சைமிளகாய் (சிறிதாக அறுத்தது)
அரை ஸ்பூன் இஞ்சி பேஸ்ட்
ஒரு ஸ்பூன் கசூரி மேத்தி
அரை ஸ்பூன் உப்பு
இரண்டு ஸ்பூன் கொத்துமல்லி
நீர் (மாவு பிசைய)
எண்ணெய் ( ரொட்டி சுட)
செய்யும் முறை:
முதலில் குக்கரில் நீர் ஊற்றவும். 300 கிராம் வள்ளிக்கிழங்கை அதில் போட்டு உப்பு சேர்க்கவும் . மூன்று விசில்கள் வரை வேக விடவும். பின்னர் வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கவும். இரண்டு கப் கோதுமை மாவு , கால் ஸ்பூன் மஞ்சள் , அரை ஸ்பூன் கரம் மசாலா , அரை ஸ்பூன் ஆம்சூர் மற்றும் கால் ஸ்பூன் அஜ்வாயின் சேர்க்கவும். ஒரு நறுக்கிய பச்சைமிளகாய் , அரை ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் ,ஒரு ஸ்பூன் கசூரி மேத்தி ,அரை ஸ்பூன் உப்பு மற்றும் கொத்துமல்லியை சேர்க்கவும். மசாலாக்கள் அனைத்தும் நன்றாக கலந்துள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தேவையான அளவுக்கு நீர் சேர்த்து மாவை நன்றக பிசைந்து கொள்ளவும். நைசாக மற்றும் மிருதுவாக வரும் வகையில் மாவை பிசையவும். பின்னர் இருபது நிமிடங்கள் மாவை அப்படியே விடவும். பின்னர் மீண்டும் ஒரு முறை பிசைந்து மாவை பந்து அளவில் எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவால் அதை புரட்டிக்கொள்ளவும். பின்னர் சப்பாத்தி போல் த ரட்டி கொள்ளவும்.இப்போது சூடான தவாமீது போட்டு சுடவும். கீழ் பகுதி பாதி வெந்திருக்கும்போதே மாவை திருப்பி போட்டு சுடவும். பின்னர் சற்று நெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி சுடவும். பின்னர் நன்றாக வெந்த வள்ளிக்கிழங்கு ரொட்டியை தயிர் சட்னி அல்லது ஊறுகாயுடன் பரிமாறினால் உங்களுக்கு எந்த ஓட்டலிலும் கிடைக்காத புது வித ரொட்டி உங்களை பார்த்து நீங்கள் சுவைக்க நான் தயார் என கூறும்.