வழக்குப்பதிவு

மும்பை, ஜனவரி. 19 – தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் முன்னாள் மந்திரி நவாப் மாலிக். இவரது மகன் பராஸ். இவர் வெளிநாட்டை சேர்ந்த 2-வது மனைவி லாரா ஹம்லீனின் விசாவை புதுபிக்க விண்ணப்பித்து இருந்தார். அப்போது பராஸ் தாக்கல் செய்த திருமண சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலக அதிகாரிகள் குர்லா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நவாப் மாலிக் மகன் பராஸ், அவரது மருமகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.