வாகனங்களை மறித்துவழிப்பறி 3 பேர் கும்பல் கைது

பெங்களூரு, செப் 9- பெங்களூரில் வாகன ஓட்டிகளை வழிமறித்து கொள்ளையடித்து வந்த 3 பேரை காமாட்சிபாளையம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நஞ்சுண்டா, கிரீஷ், நவீன் என தெரியவந்துள்ளது.
இவர்கள் கடந்த சில நாட்களாக பெங்களூரில் டாக்ஸியில் கவலம் வந்து மூன்று இடங்களில் இது போன்ற வழிப்பறி செய்தது தெரியவந்துள்ளது. வாகனங்களை மறித்து அதில் இருப்பவர்களை அடித்து உதைத்து மிரட்டி அவர்களிடமிருந்து
கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு பாக்கெட்டில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்று உள்ளனர்.
இந்த வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் இவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். வழிப்பறி செயலில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று பேர் மீதும் ஏற்கனவே அன்னபூர்ணேஸ்வரி நகர், காமாட்சிபாளையம், ஞானபாரதி நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதானவர்களில் ஒருவர் தனியார் நிறுவனத்தில் கேப் ஓட்டுநராகவும் மற்றொருவர் ஆட்டோ ஓட்டுநராக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.