வாகன எண் பிளேட் பதிவு போலி செயலிகள் அதிகரிப்பு

பெங்களூரு, பிப். 17- எச்எஸ்ஆர்பி (உயர் பாதுகாப்பு பதிவு எண் பிளேட்) எண் பிளேட் பதிவு கொள்வதற்கான காலக்கெடு மே 31 வரை நீட்டித்து அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வாகன எண் பிளேட் பதிவு செய்து கொள்வதற்கான போலி செயலிகள் அதிகரித்துள்ளன. இதை மூலதனமாக கொண்டு, சில மர்மநபர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக போலி கியூஆர் குறியீட்டு இணைப்புகளை ஆன்லைனில் வைத்துள்ளனர்.எச்எஸ்ஆர்பி எண் பிளேட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் கவனமாக இருக்கவும். ஆன்லைனில் போலி கியூஆர் குறியீடு இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீங்கள் தவறுதலாக ஒரு போலி கியூஆர் குறியீட்டை கிளிக் செய்தால், உங்கள் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் இழக்க நேரிடும். எச்எஸ்ஆர்பி எண் பிளேட் பதிவு என்ற பெயரில் சைபர் கிரைம் நடக்கிறது. சிலர் போலி செயலிகள் மூலம் பணம் சம்பாதிக்கப் முயல்கின்றனர். பதிவு செய்த பின் கிடைக்கும் கியூஆர் குறியீடுகளை போலியாக உருவாக்குகிறார்கள். நீங்கள் கியூஆர் குறியீட்டைத் தொட்டவுடன், அந்த இணைப்பு அந்நியரின் கணக்கிற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்ள பணம் மொத்தமும் சென்றுவிடும். இதுபற்றி நகர போலீசில் ஒருவர் எக்ஸ் செயலி மூலம் புகார் அளித்துள்ளார். இணைய மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினரால் கியூஆர் குறியீட்டுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் போர்டல்கள், மக்கள் பதிவு சர்வரில் அழுத்தத்தை ஏற்படுத்தி, இணையதளங்கள் சரியாக செயல்படவில்லை. இவ்வாறு, உரிமையாளர்கள் பதிவு செய்ய முற்படும் போது, ​​பல நிறுவனங்களின் பெயர், வாகன மாடல் மற்றும் மற்ற விவரங்கள் பொருந்தவில்லை. மேலும் சிலர் வாகன பதிவு எண், இன்ஜின் எண், சேஸ் எண் விவரங்களை போட்டும், அது போன்று எந்த‌ வாகனம் இல்லை என செயலிகள் தெரிவிக்கின்றன. பல வாகனங்களின் உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சிலர் பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.