வாகன விதிமீறல் – வீடுகளுக்கு சென்று அபராதம் வசூலிக்க முடிவு

பெங்களூர் : பிப்ரவரி .10-
-பெங்களூர் நகரில் சாலை போக்குவரத்து நியமங்களை மீறிய குற்றத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிக அபராத தொகை நிலுவையில் உள்ள வாக ஓட்டிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அபராதம் வசூலிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நகரில் 2181 வாகனங்களுக்கு எதிராக 50 ஆயிரத்திற்கும் அதிகமான அபராத தொகை நிலுவையில் உள்ள நிலையில் ஏற்கெனவே போக்குவரத்து போலீசார் பல வாகன உரிமையாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று அபராத தொகைகளை வசூலிக்க துவங்கியுள்ளனர். இதில் பல பேர் அபராத தொங்கியை செலுத்தாமல் வானங்களை வேறொருவருக்கு
விற்றுள்ள நிலையில் அத்தகையோருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணியும் கட்டாயம் இல்லையென்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளி சிறுவர்கள் என மூன்று நான்கு பேரை ஏற்றி செல்வதை ஒப்பு கொள்ள முடியாது.
இது பாதுகாப்பானதும் இல்லை . ஆனாலும் பல பள்ளி வாழுங்கள் அளவுக்கு மீறி மாணவர்களை ஏற்றி செல்வது theriya வந்துள்ளது. இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனார்.