வாக்களிக்க வசதியாக வட கர்நாடக‌ மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

பெங்களூரு, மே 6: கோடை விடுமுறை மற்றும் வட கர்நாடகாவின் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பயணிகளின் வசதிக்காக பெங்களூரில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே மண்டலம் முடிவு செய்துள்ளது.
ரயில் எண் 06231, பெங்களூரு சர்.எம்.விஸ்வேஸ்வரயா நிலையத்தில் இருந்து இன்று இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மே 7‍ஆம் தேதி காலை விஜயபுரா சென்றடையும். மே 7 அன்று விஜயப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்படும் ரயில் (கார் எண் 06232) மே 8 ஆம் தேதி சர்.எம்.விஸ்வேஸ்வரயா ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
ரயில் எண் 06227, பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, மே 7 ஆம் தேதி பீத‌ர் சென்றடையும். பீத‌ர் ரயில் நிலையத்தில் இருந்து மே 7 அன்று பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06228) மறுநாள் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
ரயில் எண் 07319, பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மே 7ஆம் தேதி விஜயநகரைச் சென்றடையும். மே 7 ஆம் தேதி விஜயநகர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் (எண் 07320) மே 8 ஆம் தேதி யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தை வந்த‌டையும்.ரயில் எண் 07373, மைசூரு ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மே 7ஆம் தேதி தலகுப்பா சென்றடையும். மே 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தலகுப்பா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் (எண் 07374) மே 8 ஆம் தேதி மைசூரு ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..