வாக்காளர் பட்டியல் திருத்தம்

சென்னை: அக்.31- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்.27-ம் தேதி தொடங்கின. இப்பணிகள் வரும் டிச.9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி கடந்த அக்.27-ம் தேதி இக்காலகட்டத்தில் பொதுமக்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான திருத்தம் மேற்கொள்ள முடியும். இதுதவிர, பொதுமக்கள் வசதிக்காக, வரும் நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளன. இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கிய நிலையில், இப்பணிகளை கண்காணிக்க, 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், காஞ்சிபுரம, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலைக்கு சிட்கோ மேலாண் இயக்குநர் எஸ்.மதுமதி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூருக்கு ஜவுளித்துறை ஆணையர் எம்.வள்ளலார், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்துக்கு மீன்வள ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூருக்கு நில சீர்திருத்த துறை ஆணையர் என்.வெங்கடாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறைக்கு வேளாண் ஆணையர் எல்.சுப்பிரமணியன், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கலுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல்லுக்கு தொழில்நுட்ப கல்வி ஆணையர் கே.வீரராகவராவ், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் இ.சுந்தரவள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரிக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் இ.சரவணவேல்ராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.