வாக்காளர் பட்டியல் முறைகேடு: 4 பேர் கைது – அதிகாரி சஸ்பெண்ட்

பெங்களூரு, நவ.18- வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் நடந்த முறைகேடு தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாநகராட்சி அளித்த புகாரின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி 4 பேரை மடக்கி பிடித்தனர்.
இதனிடையே அடையாள அட்டை வழங்கிய ஆர்ஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாநகராட்சி அளித்த அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் இணைக்கும் பொறுப்பு சிலுமே அமைப்புக்கு வழங்கப்பட்டது. சிலுமே இலவச அசெம்பிளிக்கு விண்ணப்பித்திருந்து. இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதாரையும் இணைக்கும் பொறுப்பு சிலுமே அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இது
சட்டத்திற்கு புறம்பாக நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தற்போது மகாதேவ்பூர் மண்டல ஆர்ஓ சந்திரசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக ஹலசூர் மற்றும் காடுகோடி காவல் நிலையங்களில் சிலுமே கல்வி, கலாச்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் மீது மாநகராட்சிபுகார் அளித்துள்ளது. விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், சிலுமே இன்ஸ்டிடியூட் ஊழியர்கள் ரேணுகா பிரசாத், தர்மேஷ், சுதாகர் மாத்ரு ரக்ஷித் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்