வாக்காளர் முறைகேடு காங். அதிரடி

பெங்களூர் : நவம்பர். 25 – வாக்காளர்கள் பட்டியல் திருத்தத்தில் நடந்துள்ள மோசடிகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து விழிப்படைந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் வாக்குச்சாவடி மட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலில் யாருடைய பெயர்களெல்லாம் நீக்கப்பட்டுள்ளது என்பது குறித்து 10 நாட்களுக்குள் தகவல்கள் அளிக்குமாறு காங்கிரஸ் டிக்கெட் எதிர்பார்த்து காத்திருப்பவர்களிடம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார் . மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று எதிர் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு டிக்கெட் கேட்டு மனுக்கள் அளித்துள்ள வேட்பாளர்களுடன் கூட்டம் நடத்திய கே பி சி சி தலைவர் டி கே சிவகுமார் வாக்குச்சாவடி மட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து யாருடைய பெயரெல்லாம் நீக்கப்பட்டுள்ளது , காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா ,
என இவை அனைத்து குறித்து பரிசீலித்து 10 நாட்களுக்குள் தகவல்கள் அளித்து அனைத்து தகவல்களையும் சேகரித்து தேர்தல் ஆணையத்திற்கு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குற்றங்குறைகள் குறித்து புகார் தெரிவிக்கப்படும் என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் ஒவ்வொருவரும் வாக்குச்சாவடி மட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள மோசடிகள் குறித்து கவனம் செலுத்தி காங்கிரசுக்கு ஆதரவாக உள்ள வாக்காளர்கள் பெயர்களை நீக்கி இருந்தால் அது குறித்து மீண்டும் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கும் பொறுப்பை மேற்கொள்ளுமாறும் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் ஐந்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர்.
டிக்கெட் கேட்டு விண்ணப்பித்திருப்போரின் பின்னணி , அவர்களுக்கு தொகுதியில் வாக்காளர்களிடம் உள்ள செல்வாக்கு ,அனைத்தையும் கருத்தில் கொண்டு இறுதியாக கட்சி மேலிடம் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் . இதில் யாருக்கு டிக்கெட் கிடைத்தாலும் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றவேண்டும். டிக்கெட் கிடைக்க வில்லை என்ற காரணத்தால் தேர்தல் நேரத்தில் கட்சிக்கு விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி கே சிவகுமார் எச்சரித்துள்ளார்.