வாக்காளர் முறைகேடு விஸ்வரூபம்

பெங்களூர்: நவம்பர் 22 – வாக்காளர்களின் அடையாள அட்டைகளை திருத்துவதில் நடந்துள்ள மோசடிகள் குறித்து ஹல்சூர் கேட் போலீசார் மாநகராட்சியின் 15 ரேஞ்ச் அதிகாரிகளுக்கு
(ஆர் ஓக்கள்) நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வாக்காளர்கள் அடையாள அட்டை திருத்தும் பணியில் மோசடிகள் நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் தனிப்பட்ட விவரங்களை சேகரித்த விஷயம் தெரியவந்துள்ள நிலையில் மாநகராட்சி ஆர் ஒக்களுக்கு ஹல்சூர் கேட் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அளித்துள்ளனர். போலிஸார் மாநகராட்சியின் 15 ஆர் ஒக்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் இவர்கள் வாக்காளர்களிடம் சேகரித்த தனிப்பட்ட விவரங்கள் குறித்து தெரிய வந்திருப்பதுடன் இதனால் படிப்படியாக ஆர் ஓக்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
டிஜிட்டல் திருத்த செயலி வாயிலாக மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தொகுதிகள் மட்டுமில்லாது மாநிலத்தின் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை இந்த நிறுவனம் சேகரித்துள்ளது தெரிய வந்துள்ளது . தொகுதிகளின் மொத்த மக்கள் தொகை , பெண்களின் எண்ணிக்கை , ஆண்களின் எண்ணிக்கை , ஜாதி வாரியான வாக்காளர்கள் எண்ணிக்கைகள் , இளம் வாக்காளர் எண்ணிக்கை , வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களின் விவரங்கள், அடையாள அட்டை இருந்து வெளி இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளவர்கள் பட்டியல்கள், ஆகியோர் குறித்து தகவல்கள் சேகரித்துள்ள இந்த வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் வேட்பாளர்களுக்கு ரகசியமாக அளித்து வருவது குறித்து தீவிர குற்றச்சாட்டுகள் கேட்டு வருகின்றன. இந்த நோக்கில் போலீசார் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். செலுமே என்ற தனியார் நிறுவனம் அமைப்பு , அதன் செயல் துறைகள் , இயக்குனர்கள் , பண பரிமாற்றங்கள் உட்பட இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாடுகல் குறித்தும் போலீசார் குற்றவாளிகளிடம் கேள்விகள் எழுப்ப உள்ளனர்.
எங்கிருந்து வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன , தவிர சேகரிக்கப்பட்ட விவரங்களை யார் யாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது , எந்தெந்த அரசியல் வாதிகளிடம் இவர்களுக்கு தொடர்புகள் இருந்துள்ளது ஆகியவை குறித்து போலீசார் விசாரணைகள் நடத்தி வரும் நிலையில் செலுமே நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி லோகேஷ் இந்த நேரத்தில் தலைமறைவாயிருப்பதுடன் அவரை கைது செய்யவும் போலீசார் சிறப்பு குழுக்களை அமைத்து தேடி வருகின்றனர். இந்த நபர் செலுவே நிறுவன ஊழியர்களுக்கு பிளாக் லெவல் அதிகாரிகள்( வட்டார பொறுப்பு அதிகாரிகள் ) என்று அடையாள அட்டைகளை விநியோகித்து வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இவருடைய கைதுக்கு பின்னரே வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை சட்ட விரோதமாக யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது