வாடிக்கையாளர் போல் வந்துபெட்ரோல் பங்கில் கொள்ளை

பெங்களூர் : டிசம்பர் . 9 – வாடிக்கையாளர் வேஷத்தில் வந்த விஷமி ஒருவன் பெட்ரோல் பங்க் ஊழியனை மிரட்டி ரொக்கம் மற்றும் மொபைல் போனை அபகரித்து சென்றுள்ள சம்பவம் பன்னேர்கட்டா வீதியின் ஷெல் பெட்ரோல் பங்கில் நடந்துள்ளது. பன்னேர்கட்டா வீதியின் ஷெல் பெட்ரோல் பங்கிற்கு நள்ளிரவு 12.30 மணியளவில் பங்க் ஊழியனுக்கு கத்தி காட்டி மிரட்டிய ஒருவன் அவனிடமிருந்து 2 மொபைல் போன்கள் மற்றும் 4500 ருபாய் ரொக்கத்தை அபகரித்து கொண்டு தப்பியோடியுள்ளான். இது குறித்து புகார் பெற்று வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சம்பவ இடத்தில உள்ள சி சி டி வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தீவிரமாயுள்ளனர். ஸ்வராஜ் என்பவர் இரவு நேர பணியில் பெட்ரோல் பங்கில் இருந்துள்ளார். நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த ஆசாமி தன் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளான். பின்னர் அதற்கான பணத்தை கொடுக்காமல் ஆயுதம் காட்டி ஸ்வராஜை மிரட்டி இரண்டு மொபைல் மற்றும் பணத்தை அபகரித்துக்கொண்டு தப்பியோடியுள்ளான். அப்போது ஸ்வராஜ் உதவிக்காக கூக்குரலிட்டும் மற்ற ஊழியர்கள் உதவிக்கு வருவதற்கு முன்னர் குற்றவாளி தப்பியோடியுள்ளான்.இது குறித்து மைக்கோ லே அவுட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி விசாரணை நடந்து வருகிறது.