
வாணியம்பாடி: நவம்பர் 11
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர் பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள் ஒருவர் பெண்.
விபத்து நடந்தது எப்படி? சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து வாணியாம்படி அருகே செட்டியப்பனூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்துக் கொண்டு சென்றது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு முன்னர் நடந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து வாணியம்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.