வாணியம்பாடி சந்தை வியாபாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு


வாணியம்பாடி, ஏப்.22-
வாணியம்பாடியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி மற்றும் ஆணையர் அண்ணாமலை ஆகியோர் தலைமையில் காய் கனி வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுடன் நடைபெற்றது.இதில் வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயலாளர் மாதேஷ்,தமிழ் நாடு
வணிகர் சங்க பேரவை மாநில இணைசெயலாளர் செல்வம் உள்ளிட்ட காய் கனி வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கிராம மற்றும் நகர புறங்களில் 121 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த முறையை விட கொரோனா தொற்றின் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து
வேகமாக பரவி வருகிறது.
இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் சந்தை மேடு பகுதியில் இயங்கி வரும் காய் கறி கடைகள் சமூக இடைவெளி பின்பற்றி இயங்கவும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தைக்கு வெளிப்புறமாக இயங்கும் சாலையோர கடைகளும் காய் கறி சந்தைகளுடன் சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் முக கவசம் அனைத்து விற்பனை செய்யவும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடமும் முக கவசம் அனைத்து வந்தால் மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி செயல்பட்டால் சந்தை வேறு இடத்திற்கு மாற்ற படும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்டு வெளியே வந்த வியாபாரிகள் சங்கத்தினர்.அளித்த பேட்டியில்

இந்த கட்டுப்பாடு விதிமுறைகளால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் தினமும் கடைகளை நடத்தினால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் பாதிககப்படாமல் இருக்கும்.
சந்தையை வேறு இடத்திற்கு மாற்றினால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் மட்டுமே
அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். என்ற நோக்கில் மட்டுமே கசப்பான இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டு வந்துள்ளோம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் வாணியம்பாடி காவல் துறை கண்காணிப்பாளர் பழனி செல்வம், நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி,கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.